இது போதும் எனக்கு!!
மாலை நேரம்
கடற்கரை ஓரம்
மடி தனில் அவள்
ஒலிந்து கொள்ளும் நிலவு
இது போதும் எனக்கு!!
இருட்டிருந்தும் கண்களில் ஒளி
மறைத்திருந்தும் மறக்காத மேனி
அணைத்திருந்தும் அகலாத பிரிவு
அனைதிருந்தும் தீராத மோகம்
இது போதும் எனக்கு!!
தனியாக ஒரு தீவு
தண்ணீரில் விளையாடும் கால்கள்
கரம் பிடிக்கும் மென்மை
கண் எதிரே குளுமை
இது போதும் எனக்கு!!
வான் முழுதும் மேகம்
வெளி முழுதும் மழை
கையருகில் அவள் துணை
ஜன்னல் வழி சிறு தூரல்
இது போதும் எனக்கு!!
வெளிநாட்டில் பிள்ளைகள்
லேசாக மூட்டு வலி
எனக்குத் துணை அவள்
அவளுக்குத் துணை நான்
இது போதும் எனக்கு !!
---> ஆனால் நான் இன்னும் அந்த "அவள்" என்பவளுக்கு காத்திருக்கிறேன் !!
Saturday, 28 March 2009
Friday, 27 March 2009
தமிழ் ஈழக் கவிதை 2 !!
ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?
வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?
நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?
இதயங்கள் காணுகின்ற
இன்பக்கன வெல்லாம்
இருள் தனில் தவிக்குதையா
ஒளிதனை ஏற்றி வைக்க
யார் வருவார்?
----------------------------
---> ஈழத் தமிழன் !!
----------------------------
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?
வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?
நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?
இதயங்கள் காணுகின்ற
இன்பக்கன வெல்லாம்
இருள் தனில் தவிக்குதையா
ஒளிதனை ஏற்றி வைக்க
யார் வருவார்?
----------------------------
---> ஈழத் தமிழன் !!
----------------------------
தமிழ் ஈழக் கவிதை 1 !!
ஈழத் தமிழன்
புகழிடம் செல்ல வேண்டிய எங்கள் தமிழனம் இன்று புகலிடம் தேடுகின்றது ஏதிலியாய்
கலை வளர்த்த எங்கள் தமிழினம் இன்று கொலைகளத்தில் ஆனது அதரவற்ற உயிரினம்
கலை வளர்த்த எங்கள் தமிழினம் இன்று கொலைகளத்தில் ஆனது அதரவற்ற உயிரினம்
இந்திய தமிழன் கண்ணிருடன் இறையாண்மை காக்க இலங்கையில் சிங்கள இன சகோதரனோ படுகொலை நிகழ்த்த எங்கள் வாழ்வோ ஆனது ஈரமற்ற பாலைவனம்
காந்தியை காட்டுகின்றான் இந்திய தமிழன் ஆனால் இங்கு புத்தனைக் காட்டியே கொல்கிறான் சிங்கள சகோதரன் விழித்து எழுவோம் என்று புரபட்டவனோ புலிகளாய் மாறி இன்று நரிகளாய் நிற்கின்றான்
இவ்வுலகில் எங்களை காபாற்ற வேண்டிய மனிதம் கூட காலம் கேட்கிறதே
இலங்கையில் அமைதி தமிழினம் அழிந்து பிறகு உறுதி
இவ்வுலகில் எங்களை காபாற்ற வேண்டிய மனிதம் கூட காலம் கேட்கிறதே
இலங்கையில் அமைதி தமிழினம் அழிந்து பிறகு உறுதி
----------------------------------------------------------------
- வேதனையுடன் ஈழத்தமிழனாய் ஒரு இந்திய தமிழன்
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
Subscribe to:
Comments (Atom)
