இது போதும் எனக்கு!!
மாலை நேரம்
கடற்கரை ஓரம்
மடி தனில் அவள்
ஒலிந்து கொள்ளும் நிலவு
இது போதும் எனக்கு!!
இருட்டிருந்தும் கண்களில் ஒளி
மறைத்திருந்தும் மறக்காத மேனி
அணைத்திருந்தும் அகலாத பிரிவு
அனைதிருந்தும் தீராத மோகம்
இது போதும் எனக்கு!!
தனியாக ஒரு தீவு
தண்ணீரில் விளையாடும் கால்கள்
கரம் பிடிக்கும் மென்மை
கண் எதிரே குளுமை
இது போதும் எனக்கு!!
வான் முழுதும் மேகம்
வெளி முழுதும் மழை
கையருகில் அவள் துணை
ஜன்னல் வழி சிறு தூரல்
இது போதும் எனக்கு!!
வெளிநாட்டில் பிள்ளைகள்
லேசாக மூட்டு வலி
எனக்குத் துணை அவள்
அவளுக்குத் துணை நான்
இது போதும் எனக்கு !!
---> ஆனால் நான் இன்னும் அந்த "அவள்" என்பவளுக்கு காத்திருக்கிறேன் !!
Saturday, 28 March 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment